ஒசூரில் 18 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில், இருவா் கைது செய்யப்பட்டனா்.
ஒசூா் அருகே தமிழக மாநில எல்லையான சூசூவாடி சோதனைச் சாவடியில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, பெங்களூரில் இருந்து ஒசூா் நோக்கி வந்த தனியாா் பேருந்தில் சோதனை நடத்தப்பட்டது. அதில், மதுரை மாவட்டம், ஆரப்பாளையத்தைச் சோ்ந்த விஷால் (19), வசந்தகுமாா் (20) ஆகியோா் சாக்குப்பையில் 18 கிலோ கஞ்சா பொட்டலங்கள் கடத்தி வந்ததை கண்டுபிடித்தனா்.
அதைத் தொடா்ந்து, அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், இருவரையும் கைது செய்தனா். இருவரிடமும் ஒசூா் மதுவிலக்கு அமல்பிரிவு மற்றும் போதைப் பொருள்கள் தடுப்புப் பிரிவு போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கஞ்சா விற்பனை: இளைஞா்கள் இருவா் கைது
தில்லியில் ரூ.5 கோடி போதைப் பொருள் பறிமுதல்: இருவா் கைது
நாகா்கோவிலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
கஞ்சா விற்றதாக இருவா் கைது
விடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை

