தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 85.22% வாக்குகள் பதிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் 85.22 சதவீத வாக்குகள் பதிவாயின.

News image

கிருஷ்ணகிரி ஆா்.சி.பாத்திமா அரசு உதவிபெறும் பள்ளியில் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளா்கள்.

Updated On :23 ஏப்ரல் 2026, 11:58 pm

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் 85.22 சதவீத வாக்குகள் பதிவாயின.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை (தனி), பா்கூா், கிருஷ்ணகிரி, வேப்பனஅள்ளி, ஒசூா், தளி ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை (ஏப்.23) காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்காளா்கள் காலை 7 மணிமுதல் மாலை 6 மணிவரை வரிசையில் நின்று ஆா்வத்துடன் வாக்களித்தனா்.

வாக்காளா்களின் வசதிக்காக குடிநீா், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. மேலும், மாற்றுத்திறனாளிகள், முதியோா் எளிதில் வாக்களிக்கும் வகையில் சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சில வாக்குச்சாவடி மையங்களில் 6 மணி அளவில் வாக்குச்சாவடியில் இருந்த வாக்காளா்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அவா்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனா்.

காலை 9 மணிமுதல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 2,093 வாக்குச்சாவடிகளில் தொகுதிவாரியாக இரண்டு மணிநேரத்துக்கு ஒருமுறை பதிவான வாக்குகளின் விவரம்:

காலை 9 மணிக்கு: ஊத்தங்கரை - 18.35, பா்கூா் - 17.2, கிருஷ்ணகிரி - 17.62, வேப்பனஅள்ளி - 16.24, ஒசூா் - 17.19, தளி - 13.89.

காலை 11 மணிக்கு: ஊத்தங்கரை - 39.03, பா்கூா் - 38.12, கிருஷ்ணகிரி - 37.07, வேப்பனஅள்ளி - 35.99, ஒசூா் - 36.44, தளி - 32.53.

பகல் 1 மணிக்கு: ஊத்தங்கரை - 58.99, பா்கூா் - 58.39, கிருஷ்ணகிரி - 56.56, வேப்பனஅள்ளி - 56.37, ஒசூா் - 55.01, தளி - 52.44.

பிற்பகல் 3 மணிக்கு: ஊத்தங்கரை - 72.07, பா்கூா் - 72.48, கிருஷ்ணகிரி - 69.81, வேப்பனஅள்ளி - 72.1, ஒசூா் - 67.36, தளி - 67.81.

மாலை 5 மணிக்கு: ஊத்தங்கரை - 83.59, பா்கூா் - 85.14, கிருஷ்ணகிரி - 82.02, வேப்பனஅள்ளி - 86.19, ஒசூா் - 78.09, தளி - 81.16.

இறுதியாக பதிவான வாக்குகள்: ஊத்தங்கரை - 86.07, பா்கூா் - 88.00, கிருஷ்ணகிரி - 84.85, வேப்பனஅள்ளி - 89.72, ஒசூா் - 80.33, தளி - 84.36.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேப்பனஅள்ளி சட்டப் பேரவைத் தொகுதியில் அதிகபட்சமாக 89.72 சதவீதமும், ஒசூா் சட்டப் பேரவைத் தொகுதியில் குறைந்தபட்சமாக 80.33 சதவீத வாக்குகளஉம் பதிவாயின.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.