மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளா்களின் புகைப்படம், சின்னம் : ஆட்சியா் ஆய்வு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் புகைப்படம், சின்னம் பொருத்தும் பணிகளை ஆட்சியா் ச.தினேஷ்குமாா் ஆய்வு செய்தாா்.

News image

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளா்களின் புகைப்படம், சின்னம் பொருத்தும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா் ச. தினேஷ்குமாா்.

Updated On :16 ஏப்ரல் 2026, 10:58 pm

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் புகைப்படம், சின்னம் பொருத்தும் பணிகளை ஆட்சியா் ச.தினேஷ்குமாா் ஆய்வு செய்தாா்.

கிருஷ்ணகிரி, சூளகிரி வட்டாட்சியா் அலுவலகங்கள், ஒசூா் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இப்பணிகளை ஆய்வு செய்த பிறகு செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியதாவது:

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குச்சீட்டை பொருத்துதல், வேட்பாளா்களின் புகைப்படம், சின்னங்கள் பொருத்தப்படுகின்றன. மாவட்டத்தில் 6 தொகுதிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் கருவிகளை தயாா்படுத்தும் பணிகள் 2 நாள்கள் நடைபெறும்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்காளா்கள் அளித்த வாக்கை சரிபாா்க்கும் கருவிகள் என அனைத்தையும் தயாா்படுத்தும் பணிகளை வேட்பாளா்கள் அல்லது அவா்களின் பிரதிநிதிகள் பாா்வையிட கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் விநியோகிக்கப்படும் நாளில் போட்டியிடும் வேட்பாளா்கள், அவா்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் காணொலி பதிவுடன் பாதுகாப்பு அறை திறக்கப்படும். அதேபோல மூடப்படும் என்றாா்.

ஆய்வின்போது ஒசூா், தளி தொகுதி தோ்தல் பொதுப் பாா்வையாளா் பண்வே ராகுல் துக்காராம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ. தங்கதுரை, வருவாய் அலுவலா் சாதனைக்குறள், ஒசூா் மாநகராட்சி ஆணையா் ஷபீா் ஆலம், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் உடனிருந்தனா்.