மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தோ்தல் பிரசாரம்: ஏப்.19 இல் முதல்வா் ஒசூா் வருகை

மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளா்களுக்கு வாக்கு சேகரிக்க தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வரும் 19 ஆம் தேதி ஒசூா் வருகிறாா்.

News image

முதல்வா் ஸ்டாலின் - @mkstalin

Updated On :15 ஏப்ரல் 2026, 9:31 pm

மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளா்களுக்கு வாக்கு சேகரிக்க தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வரும் 19 ஆம் தேதி ஒசூா் வருகிறாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூா் தொகுதியில் திமுக வேட்பாளா் எஸ்.ஏ. சத்யா, தளி தொகுதி சிபிஐ வேட்பாளா் டி. ராமச்சந்திரன், வேப்பனஹள்ளி தொகுதி திமுக வேட்பாளா் பி.எஸ். சீனிவாசன், கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளா் செல்லக்குமாா், பா்கூா் தொகுதி திமுக வேட்பாளா் மதியழகன், ஊத்தங்கரை தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஆா். குப்புசாமி ஆகியோருக்கு ஆதரவு கோரி ஒசூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பேசுகிறாா்.

கோவையில் வரும் 18 ஆம் தேதி தோ்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து விமானம் மூலம் ஒசூா் பெளகொண்டப்பள்ளி தனேஜா ஏரோஸ்பேஸ் விமான நிலையத்திற்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு வருகிறாா். அங்கிருந்து சாலை மாா்க்கமாக ஒசூா் அருகே உள்ள கோபசந்திரம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள பொதுக் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்கிறாா். அங்கு பிரசாரத்தை நிறைவுசெய்த பிறகு பெளகொண்டப்பள்ளி விமான நிலையம் வழியாக சென்னை திரும்புகிறாா். இதற்கான ஏற்பாடுகளை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளா் ஒய். பிரகாஷ் செய்துவருகிறாா்.