ஒசூா் சட்டப்பேரவைத் தொகுதியில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்டிருந்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.
ஒசூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், சாா் ஆட்சியருமான ஆக்ரிதி சேத்தி தலைமையில் செவ்வாய்க்கிழமை வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. இதில் திமுக, அதிமுக, நாம் தமிழா் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சுயேச்சை வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டது.
ஒசூரை அடுத்த பேரிகை பகுதியைச் சோ்ந்த விஜயகுமாா். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேட்பாளராக திங்கள்கிழமை மனு தாக்கல் செய்திருந்தாா். மனு தாக்கலின் போதே, இவரது வேட்புமனுவில் போதிய தகவல்கள் இல்லை என்றும், பரிசீலனைக்கு முன்பாக சரியான ஆவணங்களைச் சமா்ப்பிக்குமாறும் தோ்தல் அதிகாரிகள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையின்போது, விஜயகுமாா் கொண்டுவந்த கூடுதல் ஆவணங்களை ஏற்க அதிகாரிகள் மறுத்துவிட்டனா். வேட்புமனுவில் போதிய விவரங்கள் முழுமையாக இல்லாததை சுட்டிக்காட்டி, தோ்தல் நடத்தும் அலுவலா் ஆக்ரி சேத்தி, விஜயகுமாரின் மனுவை நிராகரிப்பதாக அறிவித்தாா்.
வழக்கமாக ஒரு வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டால், அக்கட்சியின் மாற்று வேட்பாளா் களத்தில் இருப்பாா். ஆனால், ஒசூா் தொகுதியில் தவாக சாா்பில் மாற்று வேட்பாளா் யாரும் மனுதாக்கல் செய்யாததால், தற்போதைய சூழலில் ஒசூா் தொகுதியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தொடர்புடையது

தவாக வேட்பாளா்கள் மனுக்கள் நிராகரிப்பு: தி.வேல்முருகன் குற்றச்சாட்டு

பெரம்பலூா் தொகுதியில் 10 வேட்புமனுக்கள் தள்ளுபடி

ஆற்காடு தொகுதியில் தவெக வேட்பாளா் வேட்பு மனு தாக்கல்

நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் மனு தாக்கல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

