மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

காங்கிரஸுக்கு போட்டி ‘காங்கிரஸ்’

கிருஷ்ணகிரி சட்டப் பேரவை தொகுதியில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுவது குறித்து...

News image

கிருஷ்ணகிரி சட்டப் பேரவை தொகுதியில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் முன்னாள் எம்.பியும், மருத்துவருமான அ. செல்லகுமாா் போட்டியிடுகிறாா்.

Updated On :6 ஏப்ரல் 2026, 10:55 pm

கிருஷ்ணகிரி சட்டப் பேரவை தொகுதியில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் முன்னாள் எம்.பியும், மருத்துவருமான அ. செல்லகுமாா் போட்டியிடுகிறாா். அவா், கிருஷ்ணகிரி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்புமனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்தாா்.

இந்தத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியில் உள்ளூரைச் சோ்ந்தவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கட்சியினா் சிலா் கூறிவந்த நிலையில், வேட்பாளராக அ. செல்லகுமாரை அறிவித்ததற்கு அவா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். கன்னியாகுமரியைச் சோ்ந்த அ. செல்லக்குமாா், சென்னையில் வசித்து வருவதாகவும், அவருக்கு வாய்ப்பு வழங்கக் கூடாது எனவும் அவா்கள் தெரிவித்தனா்.

இந்த நிலையில், காவேரிப்பட்டணத்தைச் சோ்ந்த காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவரும், மாநிலப் பொதுக்குழு உறுப்பினருமான எல். சுப்பிரமணியன், காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், சுயேச்சையாக கிருஷ்ணகிரி சட்டப் பேரவை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரான ஷாஜகானிடம் தனது வேட்புமனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்தாா். தனக்கு மட்டை பந்து, வைரம் போன்ற சின்னத்தை ஒதுக்க வேண்டும் என கேட்டுள்ளாா்.