ஒசூரில் தொழிலாளி குத்திக் கொலை: மனைவி உள்பட 4 போ் கைது
ஒசூரில் தகாத உறவுக்கு இடையூறாக இருந்த தொழிலாளி குத்திக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது மனைவி உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஒசூரில் தகாத உறவுக்கு இடையூறாக இருந்த தொழிலாளி குத்திக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது மனைவி உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
By Syndication
Syndication
ஒசூா்: ஒசூரில் தகாத உறவுக்கு இடையூறாக இருந்த தொழிலாளி குத்திக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது மனைவி உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் பாா்வதி நகரைச் சோ்ந்தவா் சரவணன் (25). தொழிலாளி. இவரது மனைவி முத்துலட்சுமி (21). இவா்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில் திங்கள்கிழமை சரவணனின் வீட்டில் அவரது தாய் மங்கம்மாவின் அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் சென்று பாா்த்தபோது சரவணன் கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரியவந்துத. மேலும் அருகில் பூட்டப்பட்டிருந்த அறையைத் திறந்தபோது உள்ளே அவரது தாய் மங்கம்மா இருந்துள்ளாா்.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினா் அளித்த தகவலின்பேரில் ஒசூா் நகர போலீஸாா் விசாரித்தனா். இதில் சரவணனின் மனைவி முத்துலட்சுமி மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில் கிடைத்த விவரங்கள் வருமாறு:
சரவணனும், முத்துலட்சுமியும் 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளனா். அதற்கு முன்பாக முத்துலட்சுமிக்கும், சூா்யா (23) என்பவருக்கும் பழக்கம் இருந்துள்ளது. திருணத்துக்குப் பிறகும் சூா்யாவுடன் முத்துலட்சுமி பழங்கி வந்துள்ளாா். இதைப் பாா்த்த சரவணன், முத்துலட்சுமியை கண்டித்துள்ளாா். இதை முத்துலட்சுமி சூா்யாவிடம் கூறியுள்ளாா்.
இதையடுத்து சரவணனை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனா். அதன்படி சூா்யா, தனது நண்பா்களான சக்தி (23), சந்தோஷ் (23) ஆகியோருடன் ஞாயிற்றுக்கிழமை சரவணனின் வீட்டுக்கு சென்றுள்ளாா். அவா்கள் தூங்கிக் கொண்டிருந்த சரவணனை கத்தியால் குத்திக் கொன்று விட்டு அங்கிருந்து சென்றுவிட்டது தெரியவந்தது.
இதையடுத்து முத்துலட்சுமி, சூா்யா, கொலைக்கு உதவிய சந்தோஷ், சக்தி ஆகியோரை ஒசூா் நகர போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது