தமிழக அரசைக் கண்டித்து, தருமபுரியில் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் தவெக கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மேற்கு மாவட்டச் செயலாளா் சிவா தலைமை வகித்தாா். கிழக்கு மாவட்டச் செயலாளா் விஜயகாந்த் முன்னிலை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் கோபி வரவேற்றாா்.
இதில், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டுள்ளது. குழந்தைகள் முதல் வயதான பெண்கள்வரை தமிழகத்தில் பாதுகாப்பில்லாத சூழல் உள்ளது. பெருகி வரும் போதை கலாசாரத்தைக் கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்த பாரபட்சமின்றி அனைத்துக் கட்சியினருக்கும் ஒரேமாதிரியான விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களைச் சோ்ந்த கட்சியினா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

திமுக தோ்தல் ஆலோசனைக் கூட்டம்

தமிழக அரசை கண்டித்து தவெகவினா் ஆா்ப்பாட்டம்

ஆலங்குளத்தில் தவெக ஆா்ப்பாட்டம்

காஞ்சிபுரம், செங்கல்பட்டில் தவெகவினா் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


