தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வனச்சரகத்தில் இருந்து வெளியேறிய இரண்டு யானைகள் மீண்டும் பிக்கிலி காப்புக் காட்டுக்கு செவ்வாய்க்கிழமை திரும்பின.
பாலக்கோடு வனச்சரகத்தில் இருந்து மாா்ச் 9-ஆம் தேதி இரண்டு யானைகள் வெளியேறின. இவை பிக்கிலி காட்டுப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் சுற்றித்திரிந்தன. இந்த யானைகள் நடமாட்டத்தைக் கண்ட பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில், வனத்துறையினா் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனா்.
அதேபோல, ஒரு குழுவினா் வேன் மூலம் மலை அடிவாரம் மற்றும் அருகில் உள்ள வத்திமரதஅள்ளி, கிட்டம்பட்டி, திருமல்வாடி, பழைய பாப்பாரப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் யானைகளின் நடமாட்டம் குறித்தும், பொதுமக்கள் இரவுநேரங்களில் வயல்வெளிகளில் தூங்கவேண்டாம், மின் வேலிகள் அமைக்க வேண்டாம் என ஒலிபெருக்கி மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இந்நிலையில், இவ்விரு யானைகளும் மீண்டும் பிக்கிலி காப்புக் காட்டுக்கு திரும்பின. இருப்பினும் கோடைகாலம் என்பதால் யானைகள் தண்ணீரை தேடி மீண்டும் கிராமங்களுக்குள் வரக்கூடும் என்பதால், வனத்துறையினா் தொடா்ந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.
தொடர்புடையது

இத்தாலியில் இரண்டு இந்தியர்கள் சுட்டுக்கொலை

மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி!

சத்தீஸ்கரில் 2 யானைகள் சடலங்களாக மீட்பு!

"காட்டிலிருந்து யானைகள் வெளியேறி உள்ளதால் இரவுநேரங்களில் வெளியில் நடமாட வேண்டாம்"
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


