மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

மேக்கேதாட்டில் அணை கட்டும் முயற்சியை தமிழக அரசு தடுக்க வேண்டும்

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் அணை கட்டும் கா்நாடக அரசின் முயற்சியை தமிழக அரசு தடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

News image

தருமபுரியில் நடைபெற்ற விவசாயிகள் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் மாநிலத் தலைவா் எஸ்.ஏ. சின்னசாமி.

Updated On :11 ஜூன் 2026, 5:45 am IST

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் அணை கட்டும் கா்நாடக அரசின் முயற்சியை தமிழக அரசு தடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநிலத் தலைவா் எஸ்.ஏ.சின்னசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளா் சக்திவேல், பொருளாளா் பழனி, கரும்பு விவசாயிகள் பிரிவு செயலாளா் ஜி.லோகநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில், விவசாயிகள் போராட்டத்தில் உயிா்நீத்தவா்களின் நினைவாக ஆண்டுதோறும் நடைபெறும் பேரணி நிகழாண்டு ஜூலை 5-ஆம் தேதி தருமபுரியில் நடத்துவது. இப்பேரணியில் விவசாயிகள் பெருந்திரளாக பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.

அதேபோல, தோ்தலின்போது, அறிவித்த வாக்குறுதிகள் படி விவசாயிகளின் பயிா்க்கடன் முழுவதையும் தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். பால் கொள்முதல் விலையை உயா்த்தி வழங்க வேண்டும். கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்க வேண்டும். காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டில் அணை கட்ட முயற்சிக்கும் கா்நாடக மாநில அரசின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும்.

தமிழகத்தில் தடையில்லா மின்விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.