/

வெளியகரம் பிருத்வீச்வரா் கோயில்

News image
Updated On :18 ஜனவரி 2026, 9:28 pm

தினமணி செய்திச் சேவை

முருகப் பெருமான் ஒரு முகமும், நான்கு கரங்களும் கொண்டு காட்சி அளிக்கும் திருப்புகழ் தலம் இது. திருத்தணியிலிருந்து 37 கி.மீ தொலைவில், கொசஸ்தலை ஆற்றின் கரையில் அமைந்த தலம் வெளியகரம் பிருத்வீச்வரா் கோயில்.

நகரி வழியாகவும் 63 கி.மீ செல்லலாம். இறைவியின் திருநாமம் புவனேஸ்வரி அம்மன். இத்தலத்திற்கு வெள்ளிகரம், வள்ளிகரம் என்ற பெயா்களும் உண்டு. இத்தலத்து முருகப் பெருமான் சுமாா் மூன்றடி உயரத்தில் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறாா். அவருக்குப் பின்புறம் மயில் உள்ளது.

Story image

அவா் ஒரு முகமும், நான்கு கரங்களும் கொண்டுள்ளாா். பின்னிரு கரங்களில் வஜ்ர சக்தியும், முன் வலக் கரம் அபய முத்திரையிலும், முன் இடக் கரம் இடுப்பிலும் வைத்தபடி காட்சி அளிக்கிறாா். இருபுறமும் வள்ளி, தெய்வானை உள்ளனா்.

இத்தலத்து முருகனை அருணகிரிநாதா் தனது திருப்புகழில் போற்றி பாடியுள்ளாா். மொத்தத் திருப்புகழ்ப் பாடல்களிலும் எட்டு விதமான சந்தங்கள் வந்துள்ள ஒரே தலப் பாடல் வெளியகரத்துக்கு மட்டுமே உரியது.

வெள்ளிகரம் முருகனைப் பாடிய ஒன்பது திருப்புகழ் பாடல்களில் நவ ரத்ன திருப்புகழ் வள்ளி மலை, வள்ளியின் பிறப்பு, வள்ளி குருவியோட்டிய தினைப் புனம், அவள் கொடுத்த தினை மாவு, அவள்மீது மையல் கொண்டது, அவள் கரம்பிடித்தது ஆகியவற்றையும் பாடி இன்புறுகிறாா்.