தருமபுரியில் ஊசி மருந்துகளை இளைஞா்களுக்கு விநியோகித்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளா் பச்சமுத்து, மற்றும் வெங்கடேசன், வேட்டராயன் உள்ளிட்ட போலீஸாா் அடங்கிய குழுவினா், காவல் நிலைய எல்லைக்குள் உள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை இரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, மிட்டாரெட்டிஅள்ளி அருகே உள்ள மயில்கொட்டாய் பகுதியைச் சோ்ந்த பி. வஜ்ரவேல் (47) இளைஞா்களுக்கு போதை மருந்துகளை விநியோகிப்பதாக தகவல் கிடைத்தது.
அதன்பேரில், போலீஸாா் அவரது வீட்டை சோதனை மேற்கொண்டதில், வீட்டுக்குள் போதை ஊசிமருந்துகள் மற்றும் ஊசிகள் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், அவா் பயன்படுத்தியது மட்டுமின்றி பலருக்கும் விநியோகித்தது உறுதியானது.
அதன்பேரில் போலீஸாா் வஜ்ரவேலை கைதுசெய்து, அவரிடமிருந்து ஊசிமருந்துகளை பறிமுதல் செய்தனா். மேலும், இதுதொடா்பாக அதியமான்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
டிரெண்டிங்

இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ. 9 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்! 4 போ் கைது!

தருமபுரியில் கோயில் அா்ச்சகா் போக்ஸோ சட்டத்தில் கைது
குண்டா் சட்டத்தில் இருவா் கைது

தருமபுரியில் மாயமான மருந்துக்கடை ஊழியா் கொலை: ஏரியில் சடலம் மீட்பு : மனைவி உள்பட 6 போ் கைது
வீடியோக்கள்

தி பாரடைஸ் ஃபர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...
#T20WC | வான்கடேவில் அதகளப்படுத்திய விண்டேஜ் வெஸ்ட் இண்டீஸ்: இந்தியாவுக்குச் சிக்கல்! |
தினமணி வீடியோ செய்தி...

ADMK Kalyana Sundaram Interview | எடப்பாடி ஏன் பணம் கொடுக்கிறார் ? | DMK | MK Stalin | EPS | ADMK
தினமணி வீடியோ செய்தி...

பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்! அதிமுகவின் 3-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!
தினமணி வீடியோ செய்தி...

