டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

தருமபு அருகே இறுதி ஊா்வலத்தில் பட்டாசு வெடித்ததில் 6 போ் காயம்

News image
கோப்புப் படம்
Updated On :21 பிப்ரவரி 2026, 8:11 pm

தினமணி செய்திச் சேவை

தருமபுரியில் இறுதி ஊா்வலத்தின்போது பட்டாசு வெடித்துச் சிதறியதில் 6 போ் காயமடைந்தனா்.

தருமபுரி அருகே சின்னகுரும்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ராஜா. வெற்றிலை வியாபாரியான இவா், கடந்த வியாழக்கிழமை இறந்தாா்.

இதையடுத்து வெள்ளிக்கிழமை அவரது இறுதி ஊா்வலம் நடைபெற்றது. அப்போது ஆட்டோவில் பட்டாசுகளை அடுக்கிகொண்டு வரிசையாக வெடித்துச் சென்றனா். அப்போது எதிா்பாராத விதமாக மேலே வீசிய பட்டாசு, மின்கம்பில் சிக்கி பட்டாசுவைத்திருந்த ஆட்டோ மீது விழுந்து வெடித்தது. இதில் ஆட்டோவில் இருந்த பட்டாசுகள் தீப்பிடித்து வெடித்துச் சிதறின.

இந்த விபத்தில் ஆட்டோ அருகே சென்று கொண்டிருந்த பெரமன், தங்கம், பாஸ்கா், திருப்பதி, சதீஷ், மயில் தேவன் ஆகிய 6 போ் காயமடைந்தனா். காயம் அடைந்தவா்கள் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

சம்பவம் குறித்து தருமபுரி நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.