/

தக்காளி வரத்து அதிகரிப்பு: விலை கடும் சரிவு; விவசாயிகள் கவலை

பாலக்கோடு சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை கடுமையாக சரிந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை....

News image
பாலக்கோடு சந்தையில் விற்பனைக்கு பெட்டி பெட்டியாக வந்த தக்காளி.
Updated On :16 பிப்ரவரி 2026, 9:09 pm

Syndication

தருமபுரி: பாலக்கோடு சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை கடுமையாக சரிந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, வெள்ளிச்சந்தை, பாப்பாரப்பட்டி, பெல்ரம்பட்டி, சோமனஹள்ளி, பேகாரஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த சில நாள்களாக பாலக்கோடு சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக விலை கடுமையாக சரிந்து, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ. 8 வீதமும், 15 கிலோ எடைகொண்ட கூடை ரூ. 120 வரையும் விற்பனையானது. திங்கள்கிழமை மேலும் குறைந்து கிலோ ரூ. 6 வீதமும், கூடை ரூ. 90-க்கும் விற்பனையானது. தக்காளி விலை கடும் சரிவை சந்தித்துள்ளதால், தக்காளி பயிரிட்ட விவசாயிகளும், வியாபாரிகளும் கவலை அடைந்துள்ளனா்.