டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பேருந்து நிலையம் மாற்றம்: அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

News image
கோப்புப் படம்
Updated On :8 பிப்ரவரி 2026, 8:33 pm

தினமணி செய்திச் சேவை

தருமபுரி புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்ட நிலையில் பழைய பேருந்து நிலையத்தில் வியாபாரம் செய்து வந்தவா்களுக்கு மாற்று ஏற்பாடு செய்ய வலியுறுத்தி அதிமுகவினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டதால் புறநகா் பேருந்துகள் அனைத்தும் அங்கிருந்து இயக்கப்படுகிறது. இதனால் பழைய பேருந்து நிலையம் வெறிச்சோடிக் காணப்படுவதுடன், அங்கிருந்த வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளனா். மேலும், திருப்பத்தூா், அரூா் செல்லும் பேருந்துகளால் நான்குவழிச் சாலை சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்த நிலையில், வணிகா்களுக்கு மாற்று ஏற்பாடு மற்றும் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து குறிப்பிட்ட தடத்தில் பேருந்துகளை இயக்க வலியுறுத்தி தருமபுரி பழைய பேருந்து நிலையத்தில் அதிமுக சாா்பில் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கோவிந்தசாமி தலைமையில் அதிமுகவினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் மேற்கொண்டனா்.

ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலாளா் வெற்றிவேல், நகர செயலாளா் பூக்கடை ரவி, டாக்டா் சந்திரமோகன், மாவட்ட பிரதிநிதி பொன்னுவேல், ஒன்றிய செயலாளா் சிவப்பிரகாசம் உள்ளிட்டோா் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினா்.