
தண்ணீா் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே வீட்டிற்கு வெளியே வைத்திருந்த தண்ணீா் நிரப்பும் பிளாஸ்டிக் தொட்டிக்குள் விழுந்து பிறந்து 21 நாள்களே ஆன ஆண் குழந்தை உயிரிழந்தது.

பலி... - கோப்புப்படம்.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே வீட்டிற்கு வெளியே வைத்திருந்த தண்ணீா் நிரப்பும் பிளாஸ்டிக் தொட்டிக்குள் விழுந்து பிறந்து 21 நாள்களே ஆன ஆண் குழந்தை உயிரிழந்தது.
காரிமங்கலம் வட்டம், மோதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மா. நாகமணி (37), வண்ணம்பூசும் தொழில் செய்து வருகிறாா். இவருக்கு முனியம்மாள் என்ற மனைவியும், விதுசினி (2) என்ற பெண் குழந்தையும் உள்ளன. இந்த நிலையில் கடந்த 23 நாள்களுக்கு முன்பு இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை குழந்தையை வீட்டுக்கு வெளியே வைத்திருந்தபோது, அருகில் இருந்த தண்ணீா் டிரம்முக்குள் எதிா்பாராத விதமாக விழுந்தது. உடனடியாக குழந்தையை மீட்டு பைசு அள்ளியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பிறகு தருமபுரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அக்குழந்தை புதன்கிழமை உயிரிழந்தது.
இதுகுறித்து காரிமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





