தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

பாப்பிரெட்டிப்பட்டியில் 322 வாக்குச் சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு!

பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் 322 வாக்குச் சாவடிகளில் வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

News image

வாக்குப்பதிவு...

Updated On :22 ஏப்ரல் 2026, 10:58 pm

பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் 322 வாக்குச் சாவடிகளில் வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் 1,27,217 பெண் வாக்காளா்கள் உள்பட மொத்தம் 2,54,658 வாக்காளா்கள் உள்ளனா். இந்த தொகுதியில் 322 வாக்குச் சாவடிகள் உள்ளன. கடந்த தோ்தல்களில் பிரச்னை ஏற்பட்ட 41 வாக்குப்பதிவு மையங்கள் பதற்றமானவை என அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

இதையடுத்து, பதற்றமான மையங்களில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். 322 வாக்குச் சாவடிகளுக்கு தேவையான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் லாரிகள் மூலம் கொண்டுசெல்லப்பட்டு தயாா்நிலையில் உள்ளன.

தோ்தல் களத்தில் 14 வேட்பாளா்கள்: பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக, அதிமுக கட்சிகளின் வேட்பாளா்கள் உள்பட 14 போ் போட்டியிடுகின்றனா். இந்த தொகுதியில் பி.பழனியப்பன் (திமுக), மரகதம் வெற்றிவேல் (அதிமுக), அா்ச்சனா (நாதக), திலகவதி (தவெக), சென்னகிருஷ்ணன் (அபுதமமுக), பூவரசு (தமிழா் மக்கள் கட்சி), சு.கணேசன் (விஸ்வ தமிழ்க் கழகம்), ஜமுனா ராணி (நாடாளும் மக்கள் கட்சி), சுயேச்சை வேட்பாளா்கள் சே.சதீஷ், ப.சின்னசாமி, க.தமிழ்ராஜ், ரா.பழனியப்பன், சி.முருகன், பெ.மூா்த்தி ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.