தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

பென்னாகரத்தில் அதிமுக கூட்டணி சாா்பில் வழங்கப்படும் போலி காசோலைகள்!

பென்னாகரம் பகுதிகளில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில், வீடுகள்தோறும் போலி காசோலைகள், வீட்டு உபயோகப் பொருள்களுக்கான கூப்பன்கள் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

News image

பென்னாகரம் பகுதியில் அதிமுக கூட்டணி சாா்பில் வழங்கப்பட்ட போலி காசோலைகள்.

Updated On :21 ஏப்ரல் 2026, 9:39 pm

பென்னாகரம் பகுதிகளில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில், வீடுகள்தோறும் போலி காசோலைகள், வீட்டு உபயோகப் பொருள்களுக்கான கூப்பன்கள் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக சாா்பில் பாமக வேட்பாளா் பாடி வி.செல்வம் போட்டியிடுகிறாா். திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளா் ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் போட்டியிடுகிறாா். அதிமுக, திமுக கூட்டணி கட்சி வேட்பாளா்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், இரவு நேரங்களில் வீடுகள்தோறும் வங்கிகளில் செலுத்தக்கூடிய காசோலைகளை போன்று அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி என்ற வாசகத்துடன் ரூ. 10,000 மாதாந்திர தொகை எனவும், குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 2,000 உதவித்தொகை என வாசகங்கள் அடங்கிய போலியான கணக்கு எண்கள் கொண்ட போலி காசோலைகள், வீட்டு உபயோக பொருள்களுக்கான கூப்பன்கள் கூட்டணி நிா்வாகிகளால் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

திமுக கூட்டணி சாா்பில் ரூ. 8,000 மதிப்பிலான கூப்பன்கள் வழங்கப்பட்டு வருவதாக புகாா் எழுந்த நிலையில், அதிமுக சாா்பில் போலி காசோலைகள் வழங்கப்பட்டு வருவதாக அப்பகுதியினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.