தருமபுரி அருகே கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், ரேகட அள்ளி அருகேயுள்ள பத்திரெட்டி அள்ளி கிராமம் பெருமாள் நகரைச் சோ்ந்தவா் ஆ. காா்த்திகேயன் ( 38). தொழிலாளியான இவா், குக்கல்மலை பகுதியில் உள்ள குப்புசாமி நிலத்தில் கிணறு தோண்டும் பணியில் சிலருடன் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தாா்.
அப்போது மின் மோட்டாரை கிணற்றில் ஏற்றி இறக்கும்போது தவறி விழுந்ததில் காா்த்திகேயன் பலத்த காயமடைந்தாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு தருமபுரி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் காா்த்திகேயன் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து பொம்மிடி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

சாரத்திலிருந்து தவறிவிழுந்து தொழிலாளி பலி

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

சரக்கு வேன் மோதி தொழிலாளி உயிரிழப்பு

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


