கைவிடப்படும் குழந்தைகள் எண்ணிக்கை குறைகிறது!
தருமபுரி, டிச. 31: தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் கொண்டுவந்து விடப்படும் குழந்தைகள் எண்ணிக்கை கடந்த 8 ஆண்டுகளாக படிப்படியாகக் குறைந்து வருகிறது. 2009-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2010-ம் ஆண்டில் இரு மட


தருமபுரி, டிச. 31: தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் கொண்டுவந்து விடப்படும் குழந்தைகள் எண்ணிக்கை கடந்த 8 ஆண்டுகளாக படிப்படியாகக் குறைந்து வருகிறது.
2009-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2010-ம் ஆண்டில் இரு மடங்கு குறைந்துவிட்டது.
தமிழகத்தில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் 1990-ம் ஆண்டுகளில் பெண் சிசுக் கொலைகள் மற்றும் பெற்றோரால் கைவிடப்படும் பெண் சிசுக்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
இதைத் தடுக்கும் வகையில் 1991-ம் ஆண்டில் தமிழகத்திலேயே முதல்முறையாக தருமபுரி மாவட்டத்தில் தொட்டில் குழந்தைகள் திட்டம் மாநில அரசின் சமூக நலத்துறை சார்பில் தொடங்கப்பட்டது. தருமபுரியில் இயங்கி வந்த அப்போதைய மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனை வளாகத்தில் தொட்டில் குழந்தை வரவேற்பு மையம் தொடங்கப்பட்டது.
இருப்பினும் இத்திட்டத்துக்கு பெரிய அளவில் ஆதரவு இல்லாததால் முடங்கியது. 1999-2010-ம் ஆண்டில் இம்மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண் சிசுக்கள் கொலை செய்யப்பட்டதால் இப்பிரச்னை மீண்டும் விசுவரூபம் எடுத்தது.
இதைத் தொடர்ந்து 13.4.2002 முதல் தொட்டில் குழந்தைகள் திட்டம் தீவிரமாக அமல்படுத்தப்பட்டது. அரசும், தனியார் தொண்டு நிறுவனங்களும் விழிப்புணர்வு ஏற்படுத்தியதால் பெண் சிசுக் கொலை குறைந்து தொட்டில் குழந்தை திட்டத்துக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்தது.
இத்திட்டம் தொடங்கப்பட்ட 2002-ம் ஆண்டில் ஆண் சிசுக்கள் 9, பெண் சிசுக்கள் 149 என மொத்தம் 158 சிசுக்கள் அரசுத் தொட்டிலுக்கு வந்தன. 2003-ம் ஆண்டில் அதிகபட்சமாக 207 சிசுக்கள் வந்தன. (200 பெண் சிசுக்கள்). 2004-ம் ஆண்டில் 156 சிசுக்களாக (148 பெண் சிசுக்கள்) குறைந்து, 2005-ம் ஆண்டில் மீண்டும் 178 சிசுக்களாக (173 பெண் சிசுக்கள்) அதிகரித்தது.
2006-ம் ஆண்டுக்குப் பின் இந்த எண்ணிக்கை படிப்படியாக குறைந்து 2009-ம் ஆண்டில் இது 85 (80 பெண் சிசுக்கள்) ஆக குறைந்ததுள்ளது. 2010-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை சுமார் இரு மடங்கு குறைந்து. அதாவது இந்த எண்ணிக்கை 51 ஆக உள்ளது (48 பெண் சிசுக்கள்).
தொட்டில் குழந்தைகள் திட்டத்துக்கு வரும் சிசுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கு மக்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வு தான் முக்கிய காரணம் என்று இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் பாலக்கோடு அரிமா சங்கத் தலைவர் இல.ரவிச்சந்திரன் கூறினார்.
""மக்களிடம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். திருமண உதவித்திட்டம், இலவச கல்வித் திட்டம் போன்ற பெண்களுக்கு சலுகை அளிக்கும் பல திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதாலும், விழிப்புணர்வு காரணமாகவும் தொட்டில் குழந்தை திட்டத்துக்கு வரும் பெண் சிசுக்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...