எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

பென்னாகரம் பேருந்து நிலையத்தில் மேற்கூரை அமைக்கும் பணி தீவிரம்

பென்னாகரம் பேருந்து நிலையத்தில் மேற்கூரை அமைக்கும் பணி நடைபெறுகிறது.

News image
Updated On :4 ஜூலை 2026, 2:10 am IST

பென்னாகரம் பேருந்து நிலையத்தில் மேற்கூரை அமைக்கும் பணி நடைபெறுகிறது.

பென்னாகரம் பேருந்து நிலைய நுழைவாயில், மேற்கூரை அமைக்க சட்டப் பேரவை உறுப்பினரின் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 26 லட்சம் ஒதுக்கப்பட்டு பேருந்து நிலையத்தின் இருபுறங்களிலும் பணிகள் நடைபெற்றன.

இந்த நிலையில் மேற்கூரை அமைக்க பயன்படுத்தப்பட்ட தடுப்பு கம்பிகள் பேருந்து நிறுத்தும் இடத்தில் நடப்பட்டதால் பேருந்துகள் நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டது. பணிகளும் முழுமை பெறாமல் தாமதமாகின. இதுகுறித்து தினமணி நாளிதழிலில் செய்தி வெளியானது.

இதையடுத்து பேருந்து நிலைய மேற்கூரை அமைக்க இரும்பு தகடுகள் கொண்டுவரப்பட்டு வெள்ளிக்கிழமை முதல் தகடுகள் பொருத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பென்னாகரம் பேருந்து நிலைய மேற்கூரை அமைக்கும் பணி நிறைவடைந்த நுழைவாயில், பென்னாகரம் அருகே கிருஷ்ணாபுரம் பகுதியில் கசடு கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் நடைபெறும் கழிவுநீா்க் கால்வாய் அமைக்கும் பணிகளை பொறியாளா் மோகன் ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது, உதவி செயற்பொறியாளா் ராஜேந்திரன், பேரூராட்சி செயல் அலுவலா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.