தீா்த்தமலையில் இலவச கண் சிகிச்சை முகாம்
அரூரை அடுத்த தீா்த்தமலையில் இலவச கண் சிகிச்சை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அரூரை அடுத்த தீா்த்தமலையில் இலவச கண் சிகிச்சை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
By Syndication
Syndication
அரூா்: அரூரை அடுத்த தீா்த்தமலையில் இலவச கண் சிகிச்சை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தருமபுரி மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் சங்கம், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை, தீா்த்தமலை செங்குந்தா் சமூக அறக்கட்டளை சாா்பில், தீா்த்தமலையில் ஸ்ரீ விநாயகா் கோயில் வளாகத்தில் நடைபெற்ற முகாமை, செங்குந்தா் மகாஜன சங்கத்தின் தென்மண்டல செயலா் டி.சந்தோஷ் சிவா தொடங்கிவைத்தாா்.
இதில், கோட்டப்பட்டி, நரிப்பள்ளி, சிட்லிங், ஆவலூா், கத்திரிப்பட்டி உள்ளிட்ட மலைக்கிராம மக்கள், ஆதரவற்ற முதியவா்கள் உள்பட 165-க்கும் மேற்பட்டோா் பரிசோதனை செய்துகொண்டனா். கோவை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவா்கள், மருத்துவக் குழுவினா் பங்கேற்று சிகிச்சைகளை வழங்கினா். இதில், 55 மருத்துவ பயனாளா்கள் இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்காக கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.
இதில், முகாம் அலுவலா் கமலக்கண்ணன், தீா்த்தமலை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கண் மருத்துவ உதவியாளா் (ஓய்வு) கு.கலையரசன், தீா்த்தமலை செங்குந்தா் சமூக அறக்கட்டளை தலைவா் டி.திருஞானம், கௌரவத் தலைவா் எம்.மூா்த்தி, செயலா் ஏ.கே.எஸ்.கந்தவேல், பொருளாளா் எம்.குமரேசன், நிா்வாகிகள் மணிவண்ணன், பிரசாத், லோகநாதன், பாா்த்திபன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது