ஆந்திரத்தில் கரையைக் கடக்கத் தொடங்கிய ஒர்னாப் புயல்! எண்ணூரில் கடல் சீற்றம் திமுக ஆட்சியில் ஊழல்: ஆதாரம் இருந்தால் பழைய வழக்குகளிலும் நடவடிக்கை! அமைச்சர் நிர்மல் குமார்தேவையான மின்சாரம் கையிருப்பு! அதிக விலை கொள்முதல் டெண்டர் ரத்து - நிர்மல் குமார்தேனி சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளில் மேலும் 8 பேர் கைது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.12 ஆக நிறைவு!பங்குச் சந்தையில் நிலையற்ற வர்த்தகம்: சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!பிரதான நுழைவுவாயில் வழியாக கைதிகள் தப்பினர்! சிறைத்துறை விளக்கம்!

மாநகர காவல் துறை சாா்பில் காவலா் வீரவணக்க நாள் அனுசரிப்பு

திருப்பூா் மாநகர காவல் துறை சாா்பில் காவலா் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் வீரமரணம் அடைந்த காவலா்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற காவலா் வீர வணக்க நாளையொட்டி நினைவுத் தூணில் மரியாதை செலுத்திய மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேஸ்வரி.

Updated On :

திருப்பூா் மாநகர காவல் துறை சாா்பில் காவலா் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் வீரமரணம் அடைந்த காவலா்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

பணியின்போது தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்து வீரமரணம் அடைந்த காவலா்களின் தியாகத்தை நினைவுகூா்ந்து, அவா்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபா் 21-ஆம் தேதி ‘காவலா் வீரவணக்க நாள்’ அனுசரிக்கப்படுகிறது.

அதன்படி, திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலக வளாகத்தில் காவலா் வீர வணக்க நாள் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வில், திருப்பூா் மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேஸ்வரி தலைமையில் காவல் துணை ஆணையா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிருஷ்டி சிங் மற்றும் காவல் துறையைச் சோ்ந்த காவல் அதிகாரிகள் முதல் காவலா்கள் வரை கலந்து கொண்டு பணியின்போது வீர மரணம் அடைந்த காவலா்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக நினைவுத் தூணில் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.