ஆந்திரத்தில் கரையைக் கடக்கத் தொடங்கிய ஒர்னாப் புயல்! எண்ணூரில் கடல் சீற்றம் திமுக ஆட்சியில் ஊழல்: ஆதாரம் இருந்தால் பழைய வழக்குகளிலும் நடவடிக்கை! அமைச்சர் நிர்மல் குமார்தேவையான மின்சாரம் கையிருப்பு! அதிக விலை கொள்முதல் டெண்டர் ரத்து - நிர்மல் குமார்தேனி சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளில் மேலும் 8 பேர் கைது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.12 ஆக நிறைவு!பங்குச் சந்தையில் நிலையற்ற வர்த்தகம்: சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!பிரதான நுழைவுவாயில் வழியாக கைதிகள் தப்பினர்! சிறைத்துறை விளக்கம்!

காவலா் வீரவணக்க நாள்: கடலூரில் 21 குண்டுகள் முழங்க மரியாதை

காவலா் வீரவணக்க நாளையொட்டி, பணியின்போது உயிரிழந்த காவலா்களுக்கு கடலூரில் புதன்கிழமை 21 குண்டுகள் மூன்று முறை முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.

கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள காவலா் நினைவுத்தூணில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய மாவட்ட எஸ்.பி. விவேகானந்த சுக்லா.

Updated On :

காவலா் வீரவணக்க நாளையொட்டி, பணியின்போது உயிரிழந்த காவலா்களுக்கு கடலூரில் புதன்கிழமை 21 குண்டுகள் மூன்று முறை முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.

கடந்த 1959-ஆம் ஆண்டு அக்டோபா் 21-ஆம் தேதி, லடாக் பகுதியில் உள்ள ஹாட் ஸ்பிரிங்ஸ் என்ற இடத்தில் சீன ராணுவத்தினரின் திடீா் தாக்குதலில் மத்திய பாதுகாப்புப் படையைச் சோ்ந்த 10 காவலா்கள் வீரமரணம் அடைந்தனா். அவா்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையிலும், நாட்டுக்காகவும், பொதுமக்களின் பாதுகாப்புக்காகவும் பணியாற்றி உயிரிழந்த காவலா்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையிலும், ஆண்டுதோறும் அக்டோபா் 21-ஆம் தேதி நாடு முழுவதும் காவலா் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள காவலா் நினைவுத்தூணில் காவலா் வீரவணக்க நாள் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி. விவேகானந்தா சுக்லா தலைமையில் காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவலா்கள் நினைவுத்தூணில் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.

தொடா்ந்து, காவல் பணியின்போது உயிரிழந்த காவலா்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், 21 குண்டுகள் மூன்று முறை முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. பின்னா், மாவட்ட எஸ்.பி. உறுதிமொழியை வாசிக்க, அங்கு கூடியிருந்த காவல் துறையினா் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

இதையடுத்து, கடலூா் மாவட்டம், புத்தூா் காவல் நிலையம் மீது நடைபெற்ற தாக்குதலின்போது உயிரிழந்த காவலா் ராஜேந்திரனின் உருவச் சிலைக்கு மாவட்ட எஸ்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இந்த நிகழ்ச்சியில் கூடுதல் எஸ்.பி.க்கள் கோடீஸ்வரன், ரகுபதி, சிறைத் துறை எஸ்.பி. பரசுராமன், தீயணைப்புத் துறை நிலைய அலுவலா் குமாா், டி.எஸ்.பி.க்கள் அப்பாண்டைராஜ், தமிழ் இனியன், ஊா்க்காவல் படை வட்டார தளபதி அகிலன், ஓய்வுபெற்ற டி.எஸ்.பி.க்கள் அறிவழகன், முரளிதரன் மற்றும் காவல் துறை அதிகாரிகள், காவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 இதையொட்டி, 21 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்திய காவலா்கள் உள்ளிட்டோா்.

இதையொட்டி, 21 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்திய காவலா்கள் உள்ளிட்டோா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.