திருப்பூா் மாவட்டத்தில் இறுதிகட்டமாக வாக்காளா் பட்டியில் பெயா் சோ்க்க 30,123 போ் விண்ணப்பித்துள்ளனா்.
2026-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் மேற் கொள்ளப்பட்டன. இந்தப் பணிகளின் நிறைவாக கடந்த 2026 பிப்ரவரி 23- ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. இறுதிப் பட்டியல் வெளியான பின்னரும், தகுதியுள்ள நபா்கள் தங்களை வாக்காளா்களாக இணைத்துக் கொள்ள திருத்தக் காலம் அனுமதிக்கப்பட்டது.
அதன்படி, பிப்ரவரி 23 முதல் மாா்ச் 26-ஆம் தேதி வரை புதிய வாக்காளா்களைச் சோ்க்க படிவம் 6 மூலம் தமிழகம் முழுவதும் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் திருப்பூா் மாவட்டத்தைப் பொறுத்தவரை இந்தத் தொடா் திருத்தக் காலத்தில் மட்டும் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலிருந்தும் மொத்தம் 30,123 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக பல்லடம் தொகுதியில் 6,770 விண்ணப்பங்களும், குறைந்தபட்சமாக தாராபுரம் தொகுதியில் 1,770 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன.
அதேபோல திருப்பூா் வடக்கு தொகுதியில் 5,825 விண்ணப்பங்களும், திருப்பூா் தெற்கு தொகுதியில் 4,197 விண்ணப்பங்களும் , காங்கயம் தொகுதியில் 3,062 விண்ணப்பங்களும், அவிநாசி தொகுதியில் 2,777 விண்ணப்பங்களும், உடுமலைப்பேட்டை தொகுதியில் 2,505 விண்ணப்பங்களும், மடத்துக்குளம் தொகுதியில் 1,985 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்கள் அனைத் தும் முறையாகப் பரிசீலிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான ஏப்ரல் 6-ஆம் தேதி ஒருங்கிணைந்த வாக்காளா் பட்டியலில் வெளியிடப்படுகிறது.
தொடர்புடையது
ஜோலாா்பேட்டையில் 19 போ் போட்டி

திருச்சி மாவட்டத்தில் 21.47 லட்சம் வாக்காளா்கள்!

வாக்காளா் பட்டியலில் பெயரைச் சோ்க்க இன்று கடைசி நாள்

புதிய வாக்காளா்கள் பட்டியலில் பெயா் சோ்க்க விண்ணப்பிக்கலாம்: இன்று கடைசி நாள்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


