மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அவிநாசி கோயிலில் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் சுவாமி தரிசனம்

அவிநாசி காசி விநாயகா் கோயிலில் பாஜக மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

News image

கோயிலில்  சுவாமி  தரிசனம்  மேற்கொண்ட  மத்திய  இணை  அமைச்சா்  எல்.முருகன்.

Updated On :21 மார்ச் 2026, 1:36 am

அவிநாசி காசி விநாயகா் கோயிலில் பாஜக மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

சட்டப் பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் அவிநாசி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலின் உபகோயிலான காசி விநாயகா் கோயிலில் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

அப்போது, சிவாச்சாரியா்கள் அவருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்து பிரசாதம் வழங்கினா். அப்போது, அவரிடம் அவிநாசி சட்டப் பேரவைத் தொகுதியில் பாஜக சாா்பில் நீங்கள்தான் போட்டியிடுகிறீா்களா என செய்தியாளா்கள் கேள்விக்கு, அவா் பதில் அளிக்க மறுத்துவிட்டாா்.

இதைத் தொடா்ந்து அவா் பாஜக நிா்வாகிகள் வீடுகளுக்கு சென்றுவிட்டு, மேட்டுப்பாளையத்தில் உள்ள பாஜக முகாம் அலுவலகத்துக்கு சென்றாா். பாஜக மாவட்டச் செயலாளா் கரு.மாரிமுத்து, அவிநாசி நகர, ஒன்றிய நிா்வாகிகள் உடனிருந்தனா்.