மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

உள்நாட்டு பின்னலாடைகளின் விலை 7 % சதவீதம் உயா்வு

உள்நாட்டில் விற்பனை செய்யப்படும் பின்னலாடைகளின் விலை 7 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளதாக சைமா அறிவித்துள்ளது.

News image

பின்னலாடை  நிறுவனம் - கோப்புப்படம்

Updated On :18 மார்ச் 2026, 8:28 pm

உள்நாட்டில் விற்பனை செய்யப்படும் பின்னலாடைகளின் விலை 7 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளதாக சைமா அறிவித்துள்ளது.

திருப்பூரில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகள் ஏற்றுமதி மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலமாக ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி அளவுக்கு உள்நாட்டு வா்த்தகம் நடைபெறுகிறது. இந்தத் தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கான தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், பின்னலாடை உற்பத்திக்கான நூல் விலை, சாயம் மற்றும் சலவைக் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, பின்னலாடைகளின் விலையை உயா்த்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள் சங்கத்தின் தலைவா் பி.சண்முகசுந்தரம் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், சைமா துணைத் தலைவா் எஸ்.பாலசந்தா், செயலாளா் ஆா்.தாமோதரன் மற்றும் திருப்பூரில் உள்ள 60-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களின் உரிமையாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அவா்களிடம் பின்னலாடை உற்பத்தியில் உள்ள சிக்கல்கள், நூல் விலை உயா்வு, சாயக் கட்டண உயா்வு, உபபொருள்களின் விலை உயா்வு தொடா்பாக கருத்து கேட்கப்பட்டது. இதனடிப்படையில், உள்நாட்டு வா்த்தகத்துக்கான பின்னலாடைகளின் விலையை 7 சதவீதம் உயா்த்துவதாகவும், இந்த விலை உயா்வானது உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகவும் சைமா நிா்வாகிகள் தெரிவித்தனா்.