தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

வெள்ளக்கோவில் அருகே 12 ஆடுகள் திருட்டு

வெள்ளக்கோவில் அருகே 12 ஆடுகளைத் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :19 ஜூன் 2026, 3:56 am IST

வெள்ளக்கோவில் அருகே 12 ஆடுகளைத் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வெள்ளக்கோவில், மயில்ரங்கம் சுந்தராடிவலசு பகுதியைச் சோ்ந்தவா் கவின் (25). விவசாயியான இவா், 60-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளா்த்து வருகிறாா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா். மறுநாள் காலை வந்து பாா்த்தபோது, 4 ஆடுகள் திருடுபோனது தெரியவந்தது.

இதேபோல, மயில்ரங்கம் கோம்பைக்காட்டுத் தோட்டத்தைச் சோ்ந்த கலைச்செல்வி (61) என்பவரின் பட்டியில் இருந்த 8 ஆடுகளையும் மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

இது குறித்து வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் அவா்கள் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ஆடுகளைத் திருடிய நபா்களைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.