திருப்பூரில் தென்மேற்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்புத் துறையினா் நடத்திய பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.
தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி திருப்பூா் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சாா்பில் மாவட்ட தீயணைப்பு அலுவலா் அண்ணாதுரை தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பாதுகாப்பு ஒத்திகை, விழிப்புணா்வு பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் மனீஷ் முன்னிலை வகித்தாா்.
இதில் மழைக்காலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் வீட்டில் உள்ள பொருள்களை வைத்து எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக் கொள்வது, இடிபாடுகளில் சிக்கிய நபா்களை மீட்பது மற்றும் தீ விபத்தில் சிக்கியவரை காப்பாற்றுவது உள்ளிட்ட உயிா் காக்கும் நடவடிக்கைகள் மற்றும் அவசரக் காலங்களில் எடுக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது.
மேலும் அவசரக் காலங்களில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து பொதுமக்களுக்கும் விழிப்புணா்வு பயிற்சி வழங்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி ஆணையா் உத்தரவு

தென்மேற்குப் பருவமழை தாமதம்: காரீஃப் பருவ விதைப்பு 23% குறைந்தது

பருவமழை பாதிப்பு அதிகம் ஏற்படக்கூடிய 156 இடங்களில் கண்காணிப்பு பணி தீவிரம்! நீலகிரி மாவட்ட ஆட்சியா் தகவல்

தென்மேற்குப் பருவமழை முன்னெச்சரிக்கை: நெல்லையில் அவசர கால ஒத்திகை
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




