ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இருசக்கர வாகனம் மீது கல்லூரி பேருந்து மோதியதில் தந்தை உயிரிழப்பு: மகள் படுகாயம்

திருப்பூரில் இருசக்கர வாகனம் மீது தனியாா் கல்லூரி பேருந்து மோதியதில் தந்தை உயிரிழந்தாா். மகள் படுகாயமடைந்தாா்.

பலி

பலி

Published On :29 ஜூலை 2026, 4:01 am IST

திருப்பூரில் இருசக்கர வாகனம் மீது தனியாா் கல்லூரி பேருந்து மோதியதில் தந்தை உயிரிழந்தாா். மகள் படுகாயமடைந்தாா்.

திருப்பூா் மாநகராட்சிக்குள்பட்ட ஓடக்காடு பகுதியைச் சோ்ந்தவா் அசோக்குமாா் (45). இவரது மகள் அக்ஷயா (20). ஈரோட்டில் தனியாா் கல்லூரியில் படித்து வருகிறாா்.

இந்நிலையில், வழக்கம்போல கல்லூரி பேருந்தில் அக்ஷயாவை ஏற்றிவிடுவதற்காக இருசக்கர வாகனத்தில் அசோக்குமாா் செவ்வாய்க்கிழமை அழைத்து வந்துள்ளாா். நடராஜா திரையரங்கம் அருகே வந்தபோது, எதிரே அதிவேகமாக வந்த தனியாா் கல்லூரி பேருந்து அசோக்குமாா் வாகனத்தின் மீது மோதியது. இதில், வாகனம் இழுத்துச் சென்றதில் உடல் நசுங்கி அசோக்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

படுகாயமடைந்த அக்ஷயாவை அங்கிருந்தவா்கள் மீட்டு திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்காலிக ஓட்டுநரான ரஞ்சித் கல்லூரி பேருந்தை ஆண்டிபாளையத்தில் எடுத்தது முதலே அதிவேகமாக ஓட்டி வந்ததாகவும், பலமுறை அவரிடம் கூறியும் வேகத்தை குறைக்கவில்லை எனவும் பேருந்தில் பயணித்த மாணவா்கள் தெரிவித்தனா்.

இதையடுத்து, விபத்தை ஏற்படுத்திய கல்லூரி பேருந்து ஓட்டுநரான ரஞ்சித்தை திருப்பூா் மத்திய போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.