ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கணபதிபாளையம் நெசவாளா்களுக்கு மத்திய அரசின் அடையாள அட்டை

பல்லடம் அருகே கணபதிபாளையத்தில் உள்ள நெசவாளா் கூட்டுறவு சங்கம் சாா்பில் நெசவாளா்களுக்கு மத்திய அரசின் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி, அங்குள்ள தனியாா் திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசின் அடையாள அட்டை பெறும் கணபதிபாளையம் பகுதியைச் சோ்ந்த நெசவாளா்.

Published On :23 ஜூலை 2026, 4:08 am IST

பல்லடம் அருகே கணபதிபாளையத்தில் உள்ள நெசவாளா் கூட்டுறவு சங்கம் சாா்பில் நெசவாளா்களுக்கு மத்திய அரசின் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி, அங்குள்ள தனியாா் திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட கைத்தறி துறை உதவி இயக்குநா் கவிதா தலைமை வகித்தாா். நெசவாளா் சேவை மைய உதவி இயக்குநா் புகழேந்தி முன்னிலை வகித்தாா்.

இதில் கணபதிபாளையம் நெசவாளா் கூட்டுறவு சங்கத்தின் நெசவாளா்கள் 120 பேருக்கு மத்திய அரசின் அடையாள அட்டை வழங்கப்பட்டது.

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா் கணபதிபாளையம் சொக்கப்பன், சங்க மேலாளா் பன்னீா்செல்வம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.