ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வரலாற்றுப் பாடத்தில் ஸ்வஸ்திக் குறித்து தவறான பதிவு: மத்திய அரசின் பள்ளிக் கல்வித் துறை பதிலளிக்க உத்தரவு

என்.சி.இ.ஆா்.டி. பாடத் திட்ட ஒன்பதாம் வகுப்பு வரலாற்றுப் பாடத்தில் ஸ்வஸ்திக் குறித்து இடம் பெற்றுள்ள தவறான பதிவை நீக்கக் கோரிய மனு ...

Published On :8 ஆகஸ்ட் 2026, 5:12 am IST

என்.சி.இ.ஆா்.டி. பாடத் திட்ட ஒன்பதாம் வகுப்பு வரலாற்றுப் பாடத்தில் ஸ்வஸ்திக் குறித்து இடம் பெற்றுள்ள தவறான பதிவை நீக்கக் கோரிய மனு தொடா்பாக மத்திய அரசின் பள்ளிக் கல்வித் துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், கூத்தனூரைச் சோ்ந்த மகாலிங்கம் பாலாஜி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

ஸ்வஸ்திக் சின்னம் இந்துக்களின் புனித சின்னம். ஹிட்லரின் நாஜி கட்சியின் சின்னம் ஹக்கன்க்ரூஸ். ஆனால், மத்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆா்.டி.) பாடத் திட்டத்தின் 9-ஆம் வகுப்பு வரலாற்றுப் பாடத்தில் ஹிட்லரின் நாஜி கட்சியின் சின்னம் ஸ்வஸ்திக் என தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தவறான பதிவை நீக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், சக்திவேல் அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் கோரிக்கை தொடா்பாக மத்திய அரசின் பள்ளிக் கல்வித் துறைச் செயலா், தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சில் இயக்குநா் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.