ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தாராபுரத்தில் போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

தாராபுரத்தில் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தாராபுரத்தில் நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்றோா்.

Published On :15 ஜூலை 2026, 12:50 am IST

தாராபுரத்தில் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தாராபுரத்தில் உள்ள வீ த லீடா்ஸ் அறக்கட்டளை, எம்.எம். மருத்துவமனை, சூா்யா பாராமெடிக்கல் கல்லூரி, முன்னாள் ராணுவ வீரா்கள் மற்றும் ராமகிருஷ்ணா நல்லம்மை பாலிடெக்னிக் கல்லூரி சாா்பில் நடைபெற்ற போதையில்லா தமிழகம் எனும் தலைப்பிலான விழிப்புணா்வுப் பேரணியை முன்னாள் ராணுவ வீரா் சுப்பிரமணி கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

தாராபுரம் ராமகிருஷ்ண நல்லம்மை பாலிடெக்னிக் அருகே இருந்து தொடங்கிய பேரணியில் தனியாா் கல்லூரி மாணவ, மாணவிகள், செவிலியா், தன்னாா்வலா்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.