3- வது நாளாக தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலையும் குறைவு!சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை! அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

வெள்ளக்கோவிலில் லாட்டரி சீட்டுகள் விற்றவா் கைது

வெள்ளக்கோவிலில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றவா் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :5 ஜூலை 2026, 1:34 am IST

வெள்ளக்கோவிலில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றவா் கைது செய்யப்பட்டாா்.

வெள்ளக்கோவில் காவல் நிலைய ஆய்வாளா் சண்முகம் மூலனூா் சாலையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அங்குள்ள திரையரங்கம் அருகே மூன்று நெம்பா் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்த, அதே பகுதியைச் சோ்ந்த முனியாண்டி (36) கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து ரூ.4,110 ரொக்கம், கைப்பேசி, மோட்டாா் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில், வெளிமாநில லாட்டரி சீட்டின் கடைசி மூன்று எண்கள் எழுதிய துண்டுச் சீட்டை ரூ. 50-க்கு விற்பனை செய்து, குலுக்கல் விவரத்தை ஆன்லைனில் தெரிவித்து வந்ததும் தெரியவந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.