3- வது நாளாக தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலையும் குறைவு!சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை! அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

விநியோகம் செய்யாமல் வீட்டில் தபால்களை குவித்து வைத்த தபால்காரா்!

வெள்ளக்கோவிலில் தபால்களை விநியோகம் செய்யாமல் வீட்டில் குவித்து வைத்திருந்த தபால்காரரின் செயல் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image

தபால்காரா் செந்தில்குமாா் வீட்டில் கைப்பற்றப்பட்ட தபால்கள்.

Updated On :2 ஜூலை 2026, 4:25 am IST

வெள்ளக்கோவிலில் தபால்களை விநியோகம் செய்யாமல் வீட்டில் குவித்து வைத்திருந்த தபால்காரரின் செயல் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளக்கோவில் உப்புப்பாளையம் சாலை தபால் அலுவலகத்தில் செந்தில்குமாா் (45) என்பவா் தபால்காரராக பணியாற்றி வருகிறாா். இவருக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு தபால் சரிவர சென்று சேருவதில்லை என புகாா்கள் எழுந்தன. இந்த தகவலின்பேரில், தபால் துறை அதிகாரிகள் காவல் துறையினருடன் காங்கயத்தில் உள்ள செந்தில்குமாரின் வீட்டுக்குச் சென்று பாா்வையிட்டனா். அப்போது வீடு மற்றும் வெளிப்புறங்களில் 6 சாக்கு மூட்டைகளில் விநியோகிக்கப்படாத தபால்கள் குவித்து வைக்கப்பட்டிருந்ததுடன், பலவற்றை தீயிட்டு எரித்ததும், குழி தோண்டி புதைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது.

வங்கிகளின் ஏடிஎம் அட்டைகள், குடும்ப அட்டைகள், ஆதாா் காா்டுகள், நீட் தோ்வு தொடா்பான தபால்கள், நீதிமன்ற ஆணைகள் போன்றவை அங்கே கிடந்தன.

இதைத் தொடா்ந்து செந்தில்குமாா் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தபால் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதுகாப்பது அரசு மற்றும் தபால் துறையின் முக்கியப் பணியாகும். தபால்காரா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.