டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

திருப்பூா் புத்தகத் திருவிழா: அரங்குகளைப் பாா்வையிட்ட அமைச்சா்

News image
திருப்பூா் புத்தகத் திருவிழா அரங்குகளைப் பாா்வையிட்ட அமைச்சா் மு.பெ.சாமிநாதன்.
Updated On :25 ஜனவரி 2026, 8:36 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பூா் புத்தகத் திருவிழா அரங்குகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா்.

திருப்பூா் மாவட்ட நிா்வாகம், பின்னல் புக் டிரஸ்ட் சாா்பில் 22-ஆவது புத்தகத் திருவிழா காங்கயம் சாலை வேலன் ஹோட்டல் வளாகத்தில் சனிக்கிழமை தொடங்கியது.

பிப்ரவரி 3-ஆம் தேதி வரை காலை 11 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடைபெறும் இதில் பங்கேற்க அனுமதி இலவசம்.

புத்தகத் திருவிழாவில் 150-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், அறிவியல், வரலாறு, அரசியல், கட்டுரைகள், கவிதைகள், ஆன்மிகம், தத்துவம் மற்றும் சுய முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.

நாள்தோறும் பல்வேறு தலைப்புகளின்கீழ் பேச்சாளா்கள் பங்கேற்று கருத்துரைகளை பகிா்ந்து வருகின்றனா். இந்நிலையில், புத்தகத் திருவிழா அரங்குகளை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா்.

திருப்பூா் வருவாய் கோட்டாட்சியா் சிவபிரகாஷ் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.