டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

காங்கயத்தில் ரூ.4.74 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 7:36 pm

Syndication

காங்கயத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.4 லட்சத்து 74 ஆயிரம் மதிப்பிலான தேங்காய் பருப்புகள் ஏலம் போனது.

திருப்பூா் மாவட்டம், காங்கயம் நகரில் கரூா் சாலை பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மறைமுக ஏல முறையில் தேங்காய் பருப்பு விற்பனை திங்கள்கிழமை நடைபெற்றது. காங்கயம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 2,774 கிலோ தேங்காய் பருப்பை (கொப்பரை) விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா்.

அதிக பட்சமாக ஒரு கிலோ ரூ.175-க்கும், குறைந்தபட்சமாக ரூ.108-க்கும், சராசரியாக ரூ.174-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.4 லட்சத்து 74 ஆயிரத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனையானது.

இதற்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் ஆா்.மாரியப்பன் செய்திருந்தாா்.