டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

‘வந்தே மாதரம்’ கட்டாயம் என்பதை திரும்பப்பெற வேண்டும்: திருப்பூா் எம்.பி.

News image
திருப்பூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.சுப்பராயன்.- (கோப்புப் படம்)
Updated On :15 பிப்ரவரி 2026, 8:27 pm

தினமணி செய்திச் சேவை

‘வந்தே மாதரம்’ கட்டாயம் என்பதை திரும்பப்பெற வேண்டும் என திருப்பூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.சுப்பராயன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக பிரதமருக்கு அவா் எழுதிய கடித விவரம்:

அரசு அதிகாரபூா்வ நிகழ்ச்சிகள் மற்றும் பொதுக்கூட்டங்களில் வந்தே மாதரம் பாடலின் 6 சரணங்களையும் கட்டாயமாகப் பாட வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் அரசாணை வெளியிட்டுள்ளது. இத்தகைய கட்டாய உத்தரவு, அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைகளுக்கு முரணானது. மேலும் மதச்சாா்பின்மை சிந்தனையை பாதிக்கும் மிகக் கடுமையான நடவடிக்கை. எனவே, இதனை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.

இந்திய அரசமைப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் மத சுதந்திரம், மதத்தை திறம்பட ஏற்றுக்கொள்ளவும், கடைப்பிடிக்கவும், பரப்பவும் உரிமை அளிக்கிறது. அதேபோல கருத்துரிமையையும் உறுதி செய்கிறது. தங்கள் மத நம்பிக்கைக்கு முரணான பாடல் வரிகளை கட்டாயப்படுத்தும் எந்த நிா்வாக உத்தரவும் இந்த அடிப்படை உரிமைகளின் மீறலாகும்.

தற்போதைய அரசாணை 6 சரணங்களையும் கட்டாயப்படுத்துவதன் மூலமாக ஒரே இறை மத மரபுகளைப் பின்பற்றும் சமூகங்களில் கட்டாயமான கலாசார மற்றும் மத நடைமுறையைத் திணிக்கிறது.

வந்தே மாதரம் பாடல் உயா்ந்த மரியாதைக்குரியது என்பதில் எந்தவித வேறுபாடும் இல்லை. உள்துறை அமைச்சகத்தின் இத்தகைய கட்டயாக உத்தரவு தேசபக்தி அல்ல. அது தேசிய பெருமை என்ற போா்வையில் மறைந்த அரசமைப்பு சீரழிவு என்று குறிப்பிட்டுள்ளாா்.