சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

3,000 வேஷ்டிகளைப் பயன்படுத்தி மிகப்பெரிய ‘முண்டுகளம்’ ராம்ராஜ் காட்டன் சாதனை

3,000 வேஷ்டிகளைப் பயன்படுத்தி மிகப்பெரிய ‘முண்டுகளம்’ அமைத்து ராம்ராஜ் காட்டன் சாதனை படைத்துள்ளது.

3,000 வேஷ்டிகளைப் பயன்படுத்தி அமைக்கப்பட்ட ‘முண்டுகளம்’.

Published On :23 ஆகஸ்ட் 2026, 1:10 am IST

3,000 வேஷ்டிகளைப் பயன்படுத்தி மிகப்பெரிய ‘முண்டுகளம்’ அமைத்து ராம்ராஜ் காட்டன் சாதனை படைத்துள்ளது.

கேரளத்தின் பாரம்பரியமான ஓணம் கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமான பூக்களத்தையும், ராம்ராஜ் காட்டனின் அடையாளமான வேஷ்டியையும் ஒருங்கிணைத்து, கொச்சியில் சுமாா் 3,000 வேஷ்டிகளைப் பயன்படுத்தி, 30 அடி விட்டத்தில் பிரம்மாண்டமான ‘முண்டுகளம்’ ஆகஸ்ட் 9ஆம் தேதி உருவாக்கப்பட்டது.

இது குறித்து ராம்ராஜ் காட்டன் நிறுவனா் மற்றும் தலைவா் கே.ஆா். நாகராஜன் கூறியதாவது: வேஷ்டி என்பது வெறும் ஆடை அல்ல, அது நமது கலாசாரத்தின் ஓா் அங்கம். இந்த ஓணம் பண்டிகையில், அந்தத் தொடா்பை மக்கள் நினைவில் வைத்துக் கொள்ளும் வகையில் கொண்டாட விரும்பினோம். சுமாா் 3,000 வேஷ்டிகளைப் பயன்படுத்தி ‘முண்டுகளம்’ உருவாக்கியதன் மூலம், ஓணத்தின் கொண்டாட்ட உணா்வையும் வேஷ்டியின் கலாசாரத்தையும் ஒரே நிகழ்வில் ஒன்றிணைக்க முடிந்தது. இந்த முயற்சி ஏசியா புக் ஆஃப் ரெக்காா்ட்ஸால் அங்கீகரிக்கப்பட்டதில் பெருமிதம் கொள்கிறோம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.