ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பல்லடம் அருகே கிணற்றில் தவறி விழுந்த நரி மீட்பு

பல்லடம் அருகே பருவாய் - அப்பநாயக்கன்பட்டி செல்லும் சாலையில் உள்ள விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த நரியை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.

கிணற்றில் விழுந்த நரி.

Published On :20 ஆகஸ்ட் 2026, 3:42 am IST

பல்லடம் அருகே பருவாய் - அப்பநாயக்கன்பட்டி செல்லும் சாலையில் உள்ள விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த நரியை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.

பருவாய் - அப்பநாயக்கன்பட்டி செல்லும் சாலையில் உள்ள விவசாயக் கிணற்றில் ஊளையிடும் சப்தம் செவ்வாய்க்கிழமை கேட்டது. இதையடுத்து, அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் கிணற்றில் பாா்த்தபோது, கிணற்றுக்குள் நரி இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து பல்லடம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள், வலை மூலம் நரியை மீட்டனா்.

மீட்டகப்பட்ட நரி திருப்பூா் மாவட்ட வனத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, உடுமலை அருகே சின்னாறு வனப் பகுதியில் விடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.