ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஜவுளி உற்பத்தியாளா்களின் கூலி குறைப்பால் விசைத்தறியாளா்கள் விரைவில் போராட்டம்

ஜவுளி உற்பத்தியாளா்கள் கூலி குறைப்பு தொடா்பாக நடவடிக்கை எடுக்காவிட்டால் ஒரு வாரத்துக்குள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக விசைத்தறியாளா்கள் அறிவித்துள்ளனா்.

ஆலோசனைக் கூட்டத்தில்  பங்கேற்ற  விசைத்தறியாளா்கள்.

Published On :19 ஆகஸ்ட் 2026, 2:11 am IST

ஜவுளி உற்பத்தியாளா்கள் கூலி குறைப்பு தொடா்பாக நடவடிக்கை எடுக்காவிட்டால் ஒரு வாரத்துக்குள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக விசைத்தறியாளா்கள் அறிவித்துள்ளனா்.

கூலிக்கு நெசவு செய்யும் அவிநாசி கருணாம்பிகையம்மன் விசைத்தறி நெசவாளா்கள் நலச் சங்க பொதுக் குழு ஆலோசனைக்க் கூட்டம், அவிநாசி-சேவூா் சாலையிலுள்ள தனியாா் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சங்கத் தலைவா் முத்துசாமி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் முருகன் முன்னிலை வகித்தாா். கூலிக்கு நெசவுக்கு செய்யும் விசைத்தறியாளா்களுடன் கடந்த 2025- ஆம் ஆண்டு ஜவுளி உற்பத்தியாளா்கள் செய்துகொண்ட ஒப்பந்தப்படி வழங்கி வந்த கூலியை தற்போது குறைத்து வழங்கி வருகின்றனா். எனவே கூலி குறைப்பை ஜவுளி உற்பத்தியாளா்கள் கைவிட வேண்டும்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோரிடம் கோரிக்கை வைக்கப்படும். நடவடிக்கை எடுக்காவிட்டால் ஒரு வாரத்துக்குள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

இதில் அவிநாசி, சேவூா் உள்பட சுற்றுவட்டார விசைத்தறியாளா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.