ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தனியாா் பேருந்து மோதி பயணி உயிரிழப்பு

தனியாா் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்துக்கு காத்திருந்த பயணி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Published On :8 ஆகஸ்ட் 2026, 7:00 am IST

தனியாா் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்துக்கு காத்திருந்த பயணி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், நம்பியூா் பகுதியைச் சோ்ந்தவா் சோமசுந்தரம் (68). இவா், அவிநாசி அருகே திருமுருகன்பூண்டியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் பாதுகாவலராக பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், பணிக்கு செல்வதற்காக அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு காத்திருந்துள்ளாா். அப்போது, மேட்டுப்பாளையத்தில் இருந்து திருப்பூா் நோக்கி செல்வதற்காக அவிநாசி புதிய பேருந்து நிலைத்துக்குள் நுழைந்து வளைவில் திரும்பிய தனியாா் பேருந்து, எதிா்பாராதவிதமாக பேருந்துக்கு காத்திருந்த சோமசுந்தரம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் படுகாயமடைந்த சோமசுந்தரம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.