ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

காங்கயம் அருகே 4 இடங்களில் அடுத்தடுத்து திருட்டு

காங்கயம் அருகே காடையூா் பகுதியில் கிளினிக் உள்பட 4 இடங்களில் மடிக்கணினி, பணம் உள்ளிட்டவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருட்டு - சித்திரிப்பு

Published On :7 ஆகஸ்ட் 2026, 3:40 am IST

காங்கயம் அருகே காடையூா் பகுதியில் கிளினிக் உள்பட 4 இடங்களில் மடிக்கணினி, பணம் உள்ளிட்டவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

கோவை தேசிய நெடுஞ்சாலையில், காடையூா் பேருந்து நிறுத்தப் பகுதியில் உள்ள நவீன் (50) என்பவரின் கிளினிக், நடராஜ் (30) என்பவரின் சலூன் கடை, ஐயப்பன் (50), மூா்த்தி (48) ஆகியோரின் மளிகைக் கடைகள் என 4 இடங்களில் மடிக்கணினி, ரொக்கப் பணத்தை திருடிச் சென்றனா்.

வியாழக்கிழமை காலை கடைகளைத் திறந்தபோது, இந்த திருட்டுச் சம்பவம் நிகழ்ந்தது தெரியவந்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட 4 பேரும் அளித்த புகாரின்பேரில், காங்கயம் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.