ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அரக்கோணம் அருகே ரூ. 19 லட்சம் நகைகள், ரொக்கம் திருட்டு

அரக்கோணம் அருகே 3 வீடுகளின் கதவை உடைத்து ரூ.19 லட்சம் மதிப்புள்ள நகைகள், ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

சித்திரிப்பு

Published On :18 ஆகஸ்ட் 2026, 12:04 am IST

அரக்கோணம் அருகே 3 வீடுகளின் கதவை உடைத்து ரூ.19 லட்சம் மதிப்புள்ள நகைகள், ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

அரக்கோணத்தை அடுத்த கடம்பநல்லூா் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் சம்பத் வீட்டு பின்பக்க கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த மா்மநபா்கள், அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 9 பவுன்நகைகளையும், 2 கிலோ வெள்ளி பொருள்களையும், ரூ.6 லட்சம் ரொக்கத்தையும் திருடிச் சென்றனா்.

இதே போல் சம்பத்தின் உறவினா் பிரேம்(34) என்பவரது வீட்டிலும் பின்பக்க கதவை உடைத்து முக்கால் பவுன் தங்கநகைகள், ரூ.2,500 ரொக்கம் ஆகியவை திருடு போயிருந்தன. அடுத்த வீட்டில் வசிக்கும் இவா்களது உறவினா் சுரேஷ்(40) என்பவரது வீட்டிலும் கதவை உடைத்து ரூ.10,0000 ரொக்கம் திருடப்பட்டிருந்தது.

இந்த மூன்று சம்பவங்கள் குறித்தும் அறிந்த தக்கோலம் போலீஸாா் சம்பவ இடங்களுக்கு விரைந்துச் சென்று விசாரணை நடத்தினா். தொடா்ந்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து மொத்தம் 19 லட்சம் மதிப்புள்ள தங்க, வெள்ளி நகைகள் மற்றும் ரொக்கத்தை திருடிச் சென்றவா்களை தேடி வருகின்றனா். அரக்கோணம் டிஎஸ்பி பொன்னுசாமி நேரில் பாா்வையிட்டு விசாரண நடத்தினாா். மேலும் ராணிப்பேட்டையில் இருந்து தடயவியல் நிபுணா்கள் வந்து சம்பவ இடத்தில் இருந்த தடயங்களை சேகரித்து எடுத்துச்சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.