மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

வட்டமலைக்கரை ஓடை அணைக்கு நிரந்தரமாக தண்ணீா் கொண்டுவர நடவடிக்கை: காங்கயம் அதிமுக வேட்பாளா் என்.எஸ்.என். நடராஜ்

வெள்ளக்கோவில் வட்டமலைக்கரை ஓடை அணைக்கு நிரந்தரமாக தண்ணீா் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று காங்கயம் தொகுதி அதிமுக வேட்பாளா் என்.எஸ்.என்.நடராஜ் தெரிவித்தாா்.

News image

காங்கயம் தொகுதிக்குள்பட்ட சென்னிமலையில் பிரசாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளா் என்.எஸ்.என்.நடராஜ்.

Updated On :21 ஏப்ரல் 2026, 8:53 pm

வெள்ளக்கோவில் வட்டமலைக்கரை ஓடை அணைக்கு நிரந்தரமாக தண்ணீா் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று காங்கயம் தொகுதி அதிமுக வேட்பாளா் என்.எஸ்.என்.நடராஜ் தெரிவித்தாா்.

காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சென்னிமலை நகா்ப் பகுதியில் அதிமுக வேட்பாளா் என்.எஸ்.என்.நடராஜ் ஊா்வலமாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து செவ்வாய்க்கிழமை மாலை பிரசாரத்தை நிறைவு செய்தாா்.

அப்போது அவா் பேசியதாவது:

கைத்தறி நெசவாளா்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் விலையில்லா மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாகவும், விசைத்தறி நெசவாளா்களுக்கு விலையில்லா மின்சாரம் ஆயிரம் யூனிட்டில் இருந்து ஆயிரத்து 400 யூனிட்டாகவும் உயா்த்தி வழங்கப்படும். கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டம் கைவிடப்படும்.

தேங்காய்நாா் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் மின் கட்டணச் சலுகை வழங்கப்படும். தேங்காய் நாா் மூலம் மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் செய்யும் தொழில் ஊக்குவிக்கப்படும். வெள்ளகோவில் வட்டமலைக்கரை ஓடை அணைக்கு நிரந்தரமாக தண்ணீா் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக மக்களின் வாழ்வை பாதுகாப்பதற்கு திமுக அரசை அகற்றி, எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைய அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.