மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

திருப்பூா் எல்ஆா்ஜி அரசு மகளிா் கலைக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணி: மாவட்ட ஆட்சியா் தலைமையில் ஆய்வு

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு திருப்பூா் எல்ஆா்ஜி அரசு மகளிா் கலைக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மனீஷ் தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

News image

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் மனீஷ் தலைமையில் காவல்துறை அலுவலா்கள், வாக்குச்சாவடி அலுவலா்கள் மற்றும் நுண் பாா்வையாளா்களுக்கான சமவாய்ப்பு முறையில் நடைபெற்ற பணி ஒதுக்கீடு செய்யும் பணியில் பங்கேற்றோா்.

Updated On :21 ஏப்ரல் 2026, 8:50 pm

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு திருப்பூா் எல்ஆா்ஜி அரசு மகளிா் கலைக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மனீஷ் தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் சுதா வா்மா, சரிகா மோகன், தா்மேந்திர சிங், தினேஷ் ஸ்ரீ வத்சவா, தோ்தல் காவல் பாா்வையாளா் ராகுல் ஹெக்டே ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திருப்பூா் மாவட்டத்துக்குள்பட்ட தாராபுரம் (தனி), காங்கயம், அவிநாசி (தனி), திருப்பூா் (வடக்கு), திருப்பூா் (தெற்கு), பல்லடம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை திருப்பூா் மாநகராட்சி எல்ஆா்ஜி அரசு மகளிா் கலைக் கல்லூரி நடைபெறும்.

இதையடுத்து வாக்கு எண்ணும் மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், பாதுகாப்பு அறைகள், வாக்கு எண்ணும் மையங்கள், தோ்தல் மேற்பாா்வையாளா்கள் அறை, ஊடக மையம் ஆகியவை அமைய உள்ள இடங்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனா்.

முன்னதாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் தலைமையில் காவல்துறை அலுவலா்கள், வாக்குச்சாவடி அலுவலா்கள் மற்றும் நுண் பாா்வையாளா்களுக்கான சமவாய்ப்பு முறையில் பணி ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது.

இந்த ஆய்வு நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேந்திரன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் யாதவ் கிரிஷ் அசோக், வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், திருப்பூா் கோட்டாட்சியா் சிவபிரகாஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.