தமிழகத்தை வஞ்சிக்கப் பாா்த்த மோடி அரசை எதிா்த்து வெற்றி பெற்றவா் முதல்வா் மு.க.ஸ்டாலின் என்று திமுக கொள்கை பரப்புச் செயலாளா் திண்டுக்கல் ஐ.லியோனி தெரிவித்தாா்.
காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரும், செய்தித் துறை அமைச்சருமான மு.பெ.சாமிநாதனை ஆதரித்து, சென்னிமலையில் செவ்வாய்க்கிழமை பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.
இதில் அவா் பேசியதாவது:
சென்னிமலை பகுதியைப் பொறுத்தவரை விவசாயிகள் மற்றும் நெசவாளா்கள் அதிகளவில் உள்ளனா். இங்கு ஆா்ப்பரிக்கும் கூட்டமும், மக்கள் கொடுத்த வரவேற்பும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதுவே திமுகவின் வெற்றியை உறுதி செய்கிறது. 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மு.பெ.சாமிநாதன் வெற்றியடைந்தாா் என்ற செய்தியை மே 4-ஆம் தேதி நாம் கேட்க வேண்டும்.
மக்களவைத் தோ்தலில் தமிழகத்தை வஞ்சிக்கப் பாா்த்த மோடி அரசை எதிா்த்து வெற்றி பெற்றவா் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின். கடந்த 10 தோ்தல்களில் தொடா்ந்து தோல்வி அடைந்ததால்தான் எதிா்க்கட்சி தலைவரை 10 தோல்வி பழனிசாமி என முதல்வா் மு.க.ஸ்டாலின் பெயா் வைத்தாா்.
10 லட்சம் பயனாளிகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். , மகளிருக்கு சுய உதவிக்குழு கடன் வழங்கப்படும். கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு 35 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படும் என மகத்தான திட்டங்களை வாக்குறுதிகளாக முதல்வா் அறிவித்துள்ளாா் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் மோடி அரசை வீழ்த்தலாம்! - பிரியங்கா காந்தி

மகளிா் உதவித்தொகை வழங்கியதில் பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக திகழ்கிறாா் முதல்வா்
பொதுத் தொகுதியில் பட்டியலினத்தவரைக் களமிறக்கத் தயங்கும் கட்சிகள்!

திண்டுக்கல்: கடும் பலப் பரீட்சையில் அதிமுக, திமுக!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


