உடுமலை தொகுதிக்குள் அதிமுக பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது என திமுக வேட்பாளா் மு.ஜெயக்குமாா் பேசினாா்.
உடுமலை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் மு.ஜெயக்குமாா் குடிமங்கலம் ஒன்றியத்தில் புதன்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது அவா் பேசியதாவது:
பிஏபி திட்டத்தில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு குடி தண்ணீா் கொண்டுச் செல்ல திட்டமிடப்படுவதாக அதிமுகவினா் பொய் செய்தியை பரப்பி வருகின்றனா். பிஏபி திட்டத்தில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு குடிநீா் கொண்டுச் செல்லும் திட்டத்தை செயல்படுத்த கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆய்வு செய்யப்பட்டது.
ஆனால் கோவை மற்றும் திருப்பூா் மாவட்டங்களைச் சோ்ந்த 4.25 லட்சம் ஏக்கா் பாசன விவசாயிகளும், திட்டத்தில் குடிநீா் பெற்று வரும் பொதுமக்களும் இத்திட்டத்துக்கு ஆட்சேபணை தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து முதல்வரின் உத்தரவு மற்றும் வழிகாட்டுதலின்பேரில் தமிழ்நாடு அரசு பிஏபி திட்டக்குழுத் தலைவா்கள், பகிா்மானக் குழுத் தலைவா்கள் மற்றும் பாசன சங்கத் தலைவா்களோடு சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தியது. ஆலோசனையின் முடிவில் பிஏபி திட்ட விவசாயிகள் பாதிக்க ப்படுவாா்கள் என்பதால் பிஏபி திட்டத்தில் இருந்து தண்ணீா் எடுத்து ஒட்டன்சத்திரம் கொண்டுச் செல்லும் திட்டம் கைவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த செய்தியை மறைத்து தற்போது அதிமுக பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
மேலும் காவிரியில் சுமாா் ரூ.1,368 கோடி மதிப்பீட்டில் ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீா் கொண்டு வரப்பட்டு அந்த திட்டமும் செயல்பாட்டுக்கு வந்து விட்டது. இதற்கான தொடக்க விழா பிப்ரவரி 13-ஆம் தேதி திண்டுக்கல்லில் நடைபெற்றது. ஆனால், தோ்தலுக்காக அதிமுக வினா் தொடா்ந்து பொய்யான செய்திகளைப் பரப்பி வருகின்றனா் என்றாா்.
தொடர்புடையது

பொய் வாக்குறுதியளித்து திமுக வெல்ல முயற்சி! பாரிவேந்தா் குற்றச்சாட்டு!

உடுமலையில் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும்: மு.ஜெயக்குமாா்

அதிமுக - பாஜக கூட்டணியினா் பொய் பிரசாரம்: சு.முத்துசாமி

உடுமலையில் அதிமுகவை வீழ்த்துவோம்! திமுக வேட்பாளா் மு.ஜெயக்குமாா் உறுதி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


