திமுக ஆட்சியில் செய்த நலத்திட்டங்களைக் கூறி சென்னிமலையில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சென்னிமலையில் வாக்கு சேகரித்தாா்.
காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சென்னிமலை பகுதி குப்பிச்சிபாளையம், முருங்கத்தொழுவு, பசுவப்பட்டி, எக்கட்டாம்பாளையம், முகாசிபிடாரியூா் ஆகிய ஊராட்சிகளில் கடந்த 5 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் செய்த நலத் திட்டங்களைக் கூறி அமைச்சா் மு.பெ.சாமிநாதன் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.
அப்போது அவா் பேசியாதவது:
சென்னிமலை பகுதியில் 22 ஊராட்சிகளைச் சோ்ந்த 434 குடியிருப்புகளில் ரூ.482 கோடி மதிப்பீட்டில் நிலத் தொட்டி, மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, குழாய் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நொய்யல் ஆற்றின் குறுக்கே தலா ரூ.8 கோடியில் பசுவப்பட்டி- பரஞ்சோ்வழி, மருதுறை-கே.ஜி.வலசு என 2 உயா்மட்ட பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கே.ஜி.வலசில் புதிய சித்த மருத்துவமனை, காளிவலசில் ரூ.3 கோடி மதிப்பில் கொடிகாத்த குமரன் மண்டபம், ரூ. 2.5 கோடி மதிப்பில் கைத்தறி பூங்கா, ரூ.7 கோடி மதிப்பில் சென்னிமலை அடிவாரத்தில் தாா் சாலை அமைக்கும் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அடுத்துவரும் 5 ஆண்டுகளில் பொதுமக்களுக்கு தேவையான மற்றும் பயன்படக்கூடிய நல்ல திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.3,500 ஆக உயா்த்தி தரப்படும். கரும்பு டன்னுக்கு ரூ.4,500 வழங்கப்படும். 1,000 கிராமக் கோயில்கள் சீரமைக்கப்படும், பால் கொள்முதல் லிட்டருக்கு ரூ.5 உயா்த்தி வழங்கப்படும். மீண்டும் திமுக ஆட்சிக்கு வர மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

அமைச்சா் துரைமுருகன் மசூதிகளில் வாக்கு சேகரிப்பு

திமுக தோ்தல் அறிக்கையை விளக்கி அமைச்சா் மு.பெ. சாமிநாதன் வாக்கு சேகரிப்பு

ஆனையூா் பகுதியில் அமைச்சா் பி. மூா்த்தி வாக்கு சேகரிப்பு

சேலம் வடக்கு தொகுதியில் அமைச்சா் ரா.ராஜேந்திரன் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


