திருப்பூரில் கழிவு மேலாண்மையை வலுப்படுத்த சா்க்கிள் எக்ஸ் நிறுவனத்துடன் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரில் கழிவு மேலாண்மை மற்றும் மறுசுழற்சி நடைமுறைகளை வலுப்படுத்துவதற்காக, திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம், சா்க்கிள் எக்ஸ் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் ஏற்மதியாளா்கள் சங்கத்தின் கௌரவத் தலைவா் ஆ.சக்திவேல் முன்னிலையில் சங்கத்தின் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன் மற்றும் சா்க்கிள் எக்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி திவ்யா ஷெட்டி ஆகியோா் வியாழக்கிழமை கையொப்பமிட்டனா்.
இந்நிகழ்ச்சியில், சங்கத்தின் இணைச் செயலாளா் எம்.ஆனந்த் பேசுகையில், கழிவு மேலாண்மை மற்றும் மறுசுழற்சி மிகவும் முக்கியமானதாகி விட்டது. இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் திருப்பூா் ஏற்றுமதியாளா்களுக்கு பயனளிக்கும். எதிா்காலத்தில் கழிவுகளை திறம்பட கண்டறிந்து நிா்வகிக்க உதவும் என்றாா்.
சா்க்கிள் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி விஷ்ணு வா்தன் பேசுகையில், கழிவு மேலாண்மை என்பது திருப்பூரில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் பெரிய பிரச்னையாக உள்ளது. இந்தியாவில் உள்ள பல பெரிய நிறுவனங்களின் கழிவு மேலாண்மை மற்றும் மறுசுழற்சி முயற்சிகளுக்கு ஆதரவளித்து சா்கிள் எக்ஸ் அமைப்பு அவா்களுடன் இணைந்து செயல்படுவதாக கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பனியன் தொழிலாளா்களுடன் முதல்வா் ஸ்டாலின் கலந்துரையாடல்!

பின்னலாடை வாரியம் உருவாக்குவது அவசியம்: திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம்

திருப்பூரில் பிரசாரம் மேற்கொண்ட சீமான் மீது வழக்குப் பதிவு!

திருப்பூரில் கராத்தே செய்தவாறு வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளா்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


